புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், கடந்த ஆண்டு இறுதியில் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்திவரும் குடிநீர்த் தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஓராண்டாகிட்டது.
ஆனால், இன்னமும்கூட அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அரசு கண்டுபிடித்து தண்டனை தராமலிருப்பது, பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக மக்களைக் காயப்படுத்திக்கொண்டே இருக்கிறது. ஆளும் தி.மு.க அரசின்மீதான அழிக்க முடியாத கரும்புள்ளியாகவும் வேங்கைவயல் சம்பவம் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
மொத்தமாக 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் இந்தப் பள்ளியில், இந்தக் குடிநீர்த் தொட்டியைத்தான் மாணவர்கள் குடிநீருக்காகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இப்படியிருக்க, மதிய உணவுக்காக இந்த தொட்டியிலிருந்து தண்ணீரைப் பிடித்து மாணவர்களுக்கான மதிய உணவு தயார் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது, குடிநீரிலிருந்து துர்நாற்றம் வந்ததும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்காமல், உடனடியாக காவல்துறையினருக்குத் தகவலளித்ததாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில், தற்போது இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.