Case against Patanjali: Supreme Court warns Ramdev | பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிரான வழக்கு : ராம்தேவிற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

புதுடில்லி: யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி உற்பத்தி பொருட்கள் விளம்பரத்திற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், இவரது பதஞ்சலி நிறுவனம் டூத்பேஸ்ட், சோப்புகள், தேன், ஷாம்பு , ஆயுர்வேத மருந்துகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த பொருட்களுக்கான விளம்பரங்கள் , தீராத நோய்களையும் குணப்படுத்துவதாகவும், அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கியும் வெளியாகியுள்ளன.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது., வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பதஞ்சலி நிறுவனம் எந்தவொரு தவறான விளம்பரங்களையும் வெளியிட வேண்டாம். மீறினால் ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோன்ற தவறான விளம்பரங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.