இந்தியில் மிகுந்த வரவேற்புடன் நடந்து வருகிறது `கேபிசி ஜூனியர்ஸ் வீக் (Kaun Banega Crorepati – KBC)’ நிகழ்ச்சி. கேள்விகளுக்குச் சரியான பதில்கள் அளித்து 7 கோடி வரை வெல்லும் வாய்ப்பைக் கொண்ட இந்நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்.
18 வயதிற்குப்பட்டவர்கள் பங்குபெறும் இந்நிகழ்ச்சியின் 15வது சீசன் தற்போது நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஹரியானாவைச் சேர்ந்த 14 வயது மயங்க் என்பவர், அமிதாப் பச்சனிடமிருந்து வந்த கடினமான கேள்விகளுக்கும் சடசடவென பதிலளித்து 1 கோடி ரூபாய் பரிசுத் தொகையை வென்றுள்ளார். இதுபோன்ற ரியாலிட்டி ஷோக்களில் 1 கோடி ரூபாய் வென்ற முதல் சிறுவன் (ஜூனியர்) என்ற சாதனைக்கும் மயங்க் சொந்தக்காரராகியுள்ளார். மேலும், அவரது அறிவுத் திறனைப் பாராட்டி ஹூண்டாய் ஐ20 காரும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயங்கிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/11/Screenshot__49_.png)
இது குறித்துப் பேசிய மயங்க், “இந்நிகழ்ச்சியில் எனது அறிவை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு என்னை ஊக்கப்படுத்திய அமிதாப் பச்சன் சாருக்கும், அவருடன் அமர்ந்து விளையாட வாய்ப்பளித்தவர்களும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்தத் தருணத்தில் என்னை அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். இவ்வளவு பெரியத் தொகையை வென்ற இளையப் போட்டியாளர் என்பது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பெருமை அளிக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.