முதன்முதலாக… சமையல் எண்ணெயில் பறந்த விமானம்! எங்கு, எப்படி..?!

நூறு சதவிகிதம் இயற்கையாகத் தயாரிக்கப்பட்ட எரிபொருளை பயன்படுத்தி விமானம் ஒன்று தன் பயணத்தைத் தொடங்கியுள்ளது. நிலையான விமான எரிபொருளைக் (sustainable aviation fuels – SAF) கொண்டு இயங்கும் இந்த போயிங் 787 ரக விமானம் லண்டனின் ஹீத்தோ விமான நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கியது.

விமானம்

38,000 அடி உயரத்தில் விமானம் பறந்து நியூயார்க் நகரத்தில் வெற்றிகரமாகத் தரையிறக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் உலகின் 100% புதுப்பிக்கத்தக்க பசுமை எரிபொருள் கொண்டு பறந்த முதல் விமானம் என்ற சாதனையை இந்த விமானத்தின் தயாரிப்பு நிறுவனமான விர்ஜின் அட்லான்டிக் நிறுவனம் புரிந்துள்ளது.

இந்த எரிபொருளானது புதுப்பிக்கத்தக்க உயிரி எரிபொருளான சமையல் எண்ணெய் மற்றும் விவசாய கழிவுப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்பட்டு மண்ணெண்ணெயுடன் கலக்கப்பட்டுள்ளது. இந்த எரிபொருளை பயன்படுத்துவதன் மூலம் 70 சதவிகிதம் கார்பன் வெளியேற்றத்தைத் தடுக்க முடியும்.

விமானம்

இங்கிலாந்தைச் சேர்ந்த ஷெஃபீல்ட் பல்கலைக்கழகம், அமெரிக்க விமான உற்பத்தியாளரான போயிங் நிறுவனம் மற்றும் பிரிட்டிஷ் ரோல்ஸ் ராய்ஸ் இஞ்சின் உற்பத்தியாளர்கள் ஆகியோருடன் இணைந்து கடந்த ஓராண்டாக இந்த முயற்சியில் விர்ஜின் அட்லான்டிக் நிறுவனம் ஈடுபட்டிருந்தது.

“இந்த முயற்சியானது வான் பயணத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் முயற்சியில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது” என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் விர்ஜின் அட்லான்டிக் நிறுவனத்தின் நிறுவனர் சர் ரிச்சர்டு பிரான்சன் மற்றும் அந்நாட்டின் போக்குவரத்துத்துறை செயலர் மார்க் ஹார்ப்பர் ஆகியோர் பயணித்தனர்.

Flight

இந்தப் பயணத்தில் கட்டணம் செலுத்திப் பயணிக்கும் வகையில் பயணிகள் யாரும் அழைத்துச் செல்லப்படவில்லை. பயணம் குறித்துப் பேசிய சர் ரிச்சர்ட் பிரான்சன், “ஒன்றை செய்து முடிக்கும் வரை அதை செய்ய முடியாது என்றே இந்த உலகம் கருதும். புதுமையை நோக்கிய உந்துதல் இருந்ததாலேயே அனைவரின் நலனுக்காக இந்தச் சிறப்பான சாதனை செய்து முடிக்கப்பட்டுள்ளது” என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.