வாஷிங்டன் :விசாக்களை புதுப்பிக்க புதிய நடைமுறையை, அமெரிக்க அரசு டிசம்பரில் அறிமுகம் செய்ய உள்ளது.
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு, எச்1பி உள்ளிட்ட விசாக்கள் அளிக்கப்படுகின்றன. இவற்றை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா முன்னிலையில் உள்ளது.
விசா நடைமுறைகளில் உள்ள குழப்பம் மற்றும் அதிகமானோர் விண்ணப்பிப்பதால், விசா கிடைக்காமல் நீண்ட காலம் காத்திருக்கும் நிலை உள்ளது.
இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றபோது, இந்தப் பிரச்னையை, பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்தார்.
இந்நிலையில், விசா புதுப்பிக்க புதிய வசதியை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:
வழக்கமாக, விசாவை புதுப்பிக்க, தங்களுடைய சொந்த நாடு அல்லது மற்ற நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. வரும் டிசம்பரில் இருந்து மூன்று மாதங்களுக்கு, புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன்படி, அமெரிக்காவிலேயே, விசாவை புதுப்பித்து கொள்ளலாம். முதல்கட்டமாக, 20,000 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
இதன் வாயிலாக, புதிய விசா கேட்டுள்ள விண்ணப்பங்களை, மற்ற நாடுகளில் உள்ள அமெரிக்க துாதரகங்கள் அதிகளவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இது இந்தியர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement