சென்னை: மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்டணமில்லா டோல் ஃப்ரி எண் 1913, எண்கள் 04425619204, 04425619206 மற்றும் வாட்ஸ்அப் +91 94454 7720 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் புதன்கிழமை (நவ.29) அன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கனமழை பதிவானது. தலைநகர் சென்னையின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கிய காரணத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். மழை காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இந்த சூழலில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்குமாறு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மழை காரணமாக தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ள காணரத்தால் அம்பத்தூர், ஆவடி, அரக்கோணம் பகுதிகளில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் விமான வருகை மற்றும் புறப்பாடு, மழை காரணமாக தாமதமானதாக தகவல். அதே போல மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Dear #Chennaiites
You can call us at 1913 for any grievance or flood related help.
Also please note down the other landline numbers.
We are #HereToServe you.#ChennaiCorporation#ChennaiRains#ChennaiRain pic.twitter.com/zoZIqyJCc3— Greater Chennai Corporation (@chennaicorp) November 29, 2023