குருகிராம்:குருகிராம் போலீஸ் கமிஷனர், விகாஸ் அரோரா போட்டோவை பயன்படுத்தி, மூத்த அதிகாரிகளை ஏமாற்ற முயன்றவரை போலீசார் தேடுகின்றனர்.
ஹரியானா மாநிலம் குருகிராம் மாநகர போலீஸ் கமிஷனர், விகாஸ் அரோரா போட்டோவை சமூக வலைதளமான, ‘வாட்ஸாப்’பில் முகப்பு படமாக வைத்திருந்த நபர், தான் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுக் கூப்பன்களை அனுப்பியுள்ளதாகவும், அதில் வரும் எண்ணை, அவருக்கு பகிருமாறும், கடந்த 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் போலீஸ் மூத்த அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி வந்தன. சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள் கமிஷனரிடம் தகவல் தெரிவித்தனர்.
சைபர் கிரைம் போலீசார், போலி ஆசாமி குறித்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement