அதிக உணவுகளை சூர்யா ஆர்டர் பண்ணுவது ஏன்? ஜோதிகா வெளியிட்ட சுவாரசிய தகவல்
மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'காதல் ; தி கோர்' என்கிற படத்தில் மம்முட்டியின் ஜோடியாக நடித்துள்ளார் ஜோதிகா. இந்த படத்திற்கும், ஜோதிகா, மம்முட்டியின் நடிப்பிற்கும் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. ஜியோ பேபி இயக்கியுள்ளார்.
இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், முதன்முறையாக ஜோதிகாவை சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து கதை சொன்னதாக கூறினார். அப்படி சென்றபோது நடிகர் சூர்யா வரவேற்று தன் கையாலேயே அனைவருக்கும் தேநீர் வழங்கி உபசரித்துள்ளார். அதுமட்டுமல்ல ஒரு மொபைல் ஆப் மூலமாக மிக அதிக அளவில் விதவிதமான உணவுகளை வரவழைத்து தங்களுக்கு விருந்தோம்பல் செய்தார் என்றும் கூறியிருந்தார் ஜியோ பேபி.
அதுமட்டுமல்ல அதன்பின்னர் ஒரு நாள் படப்பிடிப்பில் ஜோதிகா அந்த விருந்தோம்பல் குறித்து தன்னிடம் கூறும்போது சூர்யா எப்போதுமே இதுபோன்று விருந்தினர்கள் வரும்போது தனக்கும் பிடித்தமான உணவுகளை சேர்த்து அதிக அளவில் ஆர்டர் செய்து விடுவார். அப்படி விருந்தினர் வரும்போது மட்டும் தான் தன்னால் விதவிதமாக சாப்பிட முடியும் என்பதால் தான் அவர் அதிக அளவிற்கு உணவு ஆர்டர் செய்ததாக ஜியோ பேபியிடம் உண்மையை போட்டு உடைத்து உள்ளார் ஜோதிகா.