ஜான்பூர்:உத்தர பிரதேசத்தில், திருமண ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் குத்திக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உ.பி., மாநிலம் ஜான்பூர் மாவட்டம் கெடசராய் கிராமத்தில் நேற்று முன் தினம் நடந்த, திருமண நிகழ்ச்சிக்கு, அஜய் பிரஜாபதி,23, அவரது தம்பி அங்கித், 20, ஆகிய இருவரும் பங்கேற்றனர்.
அங்கு பலர் மது அருந்திக் கொண்டே விவாதம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, சகோதரர்களுக்கும் மற்ற சிலருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆறு பேர் சேர்ந்து இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பினர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும் அருகிலுள்ள சுதர் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டனர். பரிசோதனை செய்த டாக்டர், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தார்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், முகேஷ் பிந்த், நீஷு பிந்த் மற்றும் சதீஷ் பிந்த் ஆகிய மூவரையும் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். மற்ற மூவரும் கைது செய்யப்பட்டனர். ஆறு பேரிடமும் விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement