சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக தனது கடமைகளை ஆரம்பித்தார்.
இந்நிகழ்வில்; பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பல நாட்களாக வெற்றிடமாக இருந்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு, நேற்று (29) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பதில் பொலிஸ் மா அதிபராக நியமித்துள்ளார்.