இன்று மாலை 5.30 மணிக்கு பின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட அனுமதி

புதுடெல்லி: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடும் நேரத்தை தலைமை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை இன்று (நவ.30) மாலை 5.30 மணிக்கு பின்னர் வெளியிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தேர்தல் ஆணையத்தின் அக்.31-ம் தேதி உத்தரவின்படி, மிசோரம், சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்கட்டத் தேர்தல் நடைபெற்ற நவ.7-ம் தேதி காலை 7 மணி முதல் தெலங்கானா மாநிலத் தேர்தல் முடிவடையும் நவ.30-ம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த காலக்கெடு ஒரு மணி நேரம் முன்னதாக குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த ஆண்டுடன் ஆட்சிக் காலம் நிறைவடையும் 5 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் அக்.9-ம் தேதி அறிவித்தார். அதன்படி, இந்த ஆண்டுடன் பதவி காலம் நிறைவடையும் மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன.

மிசோரம் மற்றும் சத்தீஸ்கரின் மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு முதல் கட்டமாகவும் நவ.7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. நவ.17ம் தேதி சத்தீஸ்கரில் உள்ள மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாகவும், மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடந்தது. இதனைத் தொடந்து மறுவாரம் அக்.25ம் தேதி ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு வாக்கு பதிவு நடைபெற்றது. இறுதியாக தெலங்கானாவில் இன்று வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. இந்த ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகளும் டிச.3-ம் தேதி எண்ணப்படுகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.