உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு இன்று (டிசம்பர் 01) காலை 09.00 மணிக்கு கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இருந்து எயிட்ஸ் தின நடைபவனி இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த அணிவகுப்பு நாளை காலை 08.00 மணிக்கு ஹைட்பார்க் மைதானத்தில் இருந்து ஆரம்பமாகி பொதுமக்களுக்கு அறிவித்து புஞ்சி பொரளை, மருதானை வழியாக ஹைட்பார்க் மைதானத்திற்கு திரும்ப உள்ளது.
உலக எயிட்ஸ் தின அணிவகுப்பில் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், முப்படையினர், சிறைச்சாலை அதிகாரிகள், கொழும்பு மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், STD மற்றும் AIDS கட்டுப்பாட்டு திட்டத்தின் விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட பலரர் கலந்துகொள்ளவுள்ளனர்.