சென்னை சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகிறது. எனவே ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று காலை உபரி நீர் திறப்பு 6 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. ஆகவே, கரையோரத்தில் தாழ்வான […]