Tamil News Today Live: ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை கோரிய வழக்கு: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது உயர் நீதிமன்றம்

ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை கோரிய வழக்கு: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது உயர் நீதிமன்றம்

சென்னை தீவுத் திடலில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

சென்னை தீவுத் திடலை சுற்றி டிசம்பர் 9, 10 தேதிகளில் தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர தெரு பந்தயமாக ஃபார்முலா 4 கார் பந்தய போட்டி நடத்தப்படவுள்ளது.

இருங்காட்டுக்கோட்டையில் தனி பந்தய தளம் இருக்கும் நிலையில், தீவுத்திடல் உள்ளிட்ட சென்னை மாநகரில் எந்த பகுதியிலும் இந்த கார் பந்தயத்தை நடத்த தடை விதிக்க கோரி சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த மருத்துவர் ஸ்ரீஹரிஷ் என்பவரும், லூயிஸ் ராஜ் என்பரும் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

ஃபார்முலா 4 கார் பந்தயம் | சென்னை

பன்நோக்கு சிறப்பு மருத்துவமனையிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் பந்தயம் நடக்க இருப்பதாகவும், 250 கிலோமீட்டர் வேகத்தில் கார்கள் செல்லும்போது 130 டெசிபல் ஒலி மாசு ஏற்படும் என்பதால் சிகிச்சை பெறுபவர்களை பாதிக்கும் என மனுக்களில் குற்றம்சாட்டப்பட்டது. ராணுவம், துறைமுகம், கடற்படை ஆகியவற்றின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் தெரு பந்தயமாக இரண்டு நாட்கள் மட்டும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடத்தப்பட உள்ளதாகவும், அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்பட்டு உள்ளதாகவும், ராணுவம், கடற்படையுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அரசு மருத்துவமனையின் நோடல் அதிகாரியான மருத்துவர் ஆனந்த் குமார் ஆஜராகி பந்தய வழித்தடம் மருத்துவமனையிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் உள்ளதால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏதும் இருக்காது என உறுதி அளித்தார்.

உயர் நீதிமன்றம்

இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசின் பல்வேறு துறைகள், சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆகியவற்றிடம் பெற்ற அனுமதி குறித்த விவரங்களை தமிழக அரசு தாக்கல் செய்தது.

அரசு பல்வேறு அனுமதிகளை பெற்றுள்ளதை குறிப்பிட்ட நீதிபதிகள், வேறு யாரிடம் அனுமதி பெற வேண்டும் என மனுதாரர்கள் தரப்பிடம் கேள்வி எழுப்பியபோது, ராணுவம், துறைமுகம், கடற்படை ஆகியவற்றின் அனுமதி அவசியம் என குறிப்பிடப்பட்டது.

இவை அனுமதி வழங்கியதாக நேற்று அரசு தெரிவித்துள்ளதால், அதுதொடர்பான எழுத்துப்பூர்வமான அனுமதியை பெற்று இன்று தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.