பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2024 சேட்டக் அர்பேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெக்பேக் மற்றும் ஸ்டாண்டர்டு என இரு விதமாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. டெக்பேக் வேரியண்டில் கூடுதல் வேகம் மற்றும் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் அறிமுகமாகியுள்ளது.
முந்தைய மாடலை விட கூடுதல் வேகம் மற்றும் ரேஞ்ச் வெளிப்படுத்தும் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. தோற்ற அமைப்பில் வசதிகளில் பெரிதாக மாற்றமில்லாமல் வந்துள்ளது.
2024 Bajaj Chetak Urbane
சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் 3 கட்ட PMSM மோட்டார் அதிகபட்சமாக 5 bhp பவர் மற்றும் 20 Nm டார்க் வழங்குகின்றது. 2.9 kwh பேட்டரி பெற்ற மாடல் சிங்கிள் சார்ஜில் 90 கிமீ ரேஞ்சு வழங்கும். இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகும். சேட்டக் அர்பேன் அதிகபட்ச வேகம் மணிக்கு 63 கிமீ மற்றும் டெக்பேக் மாடல் 73km/hr ஆகும்.
டாப் வேரியண்ட் ஆக வந்துள்ள டெக்பேக் வேரியண்டில் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட்ஸ் என இருவிதமான ரைடிங் மோடுகள் பெற்று ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரிவர்ஸ் மோடு மற்றும் முழுமையான MyChetak ஆப் கனெக்ட்டிவிட்டி உள்ளது.
பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டருக்கு மேட் கோரஸ் கிரே, சைபர் வெள்ளை, கருப்பு மற்றும் இன்டிகோ மெட்டாலிக் என நான்கு நிறங்களை பெற்று ஆஃப் போர்டு சார்ஜர் 650w வழங்கப்படுகின்றது.
2024 Bajaj Chetak urbane STD – ₹ 1,15,000
2024 Bajaj Chetak urbane Tecpac – ₹ 1,21,001
2023 Bajaj Chetak premium – ₹ 1,15,002
(All ex-showroom price in Tamil Nadu)