கடந்த நவம்பர் 2023 மாதந்திர விற்பனையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ஒட்டுமொத்தமாக ஏற்றுமதி உட்பட 21 சதவிகித வளர்ச்சி அடைந்து 70,576 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
ஸ்கார்பியோ மாடலுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் உட்பட 2.8 லட்சத்திற்கும் அதிகமான எஸ்யூவிகளை இன்னும் டெலிவரி செய்யவில்லை என்று நவம்பர் மாதம் முன்னதாக கார் தயாரிப்பாளர் குறிப்பிட்டிருந்தது.
Mahindra Sales Report November 2023
மஹிந்திரா எஸ்யூவி வாகனங்கள் பிரிவில், மஹிந்திரா உள்நாட்டு சந்தையில் 39,981 வாகனங்களை விற்பனை செய்துள்ளதன் மூலம் 32% வளர்ச்சியையும், ஏற்றுமதி உட்பட ஒட்டுமொத்தமாக 40,764 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளது.
வர்த்தக வாகனங்களுக்கான உள்நாட்டு விற்பனை 22,211 ஆக இருந்தது.
.மஹிந்திரா மஹிந்திரா லிமிடெட். ஃபார்ம் எக்யூப்மென்ட் செக்டார் (FES), நவம்பர் 2023க்கான டிராக்டர் விற்பனை விபரத்தை அறிவித்தது. நவம்பர் 2023-ல் உள்நாட்டு விற்பனை 31,069 யூனிட்களாக இருந்தது, நவம்பர் 2022 இல் 29,180 யூனிட்கள் ஆகும்.
ஓட்டுமொத்தமாக 2023 நவம்பரில் 32,074 யூனிட்டுகளாக இருந்தது, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 30,528 யூனிட்களாக இருந்தது. இந்த மாதத்திற்கான ஏற்றுமதி 1,005 யூனிட்டுகளாக இருந்தது.
மஹிந்திரா வாகனப் பிரிவின் தலைவர் விஜய் நக்ரா, “எங்கள் எஸ்யூவி போர்ட்ஃபோலியோவுக்கான வலுவான ஆதரவுடன் எங்களது வளர்ச்சிப் போக்கைத் தொடர்கிறோம். நவம்பரில், நாங்கள் மொத்தமாக 39,981 யூனிட்களை விற்பனை செய்துள்ளோம். இது 32 சதவீத வளர்ச்சியாகும். ஆரோக்கியமான பண்டிகைக் காலத்தை நாங்கள் கண்டாலும், நவம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாகங்களில் விநியோகச் சவால்களை எதிர்கொண்டோம். நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து, சவால்களைத் தணிக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.