இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் நெடுந்தீவிக்கான விஜயத்தினை நேற்றையதினம் (30) மேற்கொண்டிருந்தார்.
இதன்போது நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் உயர்ஸ்தானிகருக்கான வரவேற்பளிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கான உலர் உணவுப் பொருட்களும் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டன.
பிரதேச கடற்போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினையும் குடிநீர் தேவையை சீராக்கும் வகையில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றையும் பெற்று தருமாறு நெடுந்திய பிரதேச செயலாளர் உயர்திரு எப்.சி.சத்தியசோதி அவர்களால் கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டது.
மேலும் நெடுந்தீவு மேற்கு பகுதியில் அமையவுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் தொடர்பான களவிஜயத்தினை இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டிருந்தார்.
தொடர்ந்து மத்திய பகுதியில் அமைந்துள்ள புராதன சின்னங்கள் மற்றும் மணற்கடற்கரை போன்ற இடங்களையும் பார்வையிட்டு தனது பயணத்தை நிறைவு செய்தார்.