What to watch on Theatre & OTT: அன்னபூரணி முதல் அனிமல் வரை – இந்த வாரம் இத்தனை படங்களா?

பார்க்கிங் (தமிழ்)

பார்க்கிங்

அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பார்க்கிங்’. இரண்டு வீடு ஒரு பார்க்கிங், இரண்டு வீட்டிலும் கார் இருக்கிறது எனும்போது நடக்கும் பிரச்னைகள்தான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது

அன்னபூரணி (தமிழ்)

அன்னபூரணி

நயன்தாவின் 75வது படம் ‘அன்னபூரணி’. இப்படத்தை இயக்குநர் ஷங்கரின் துணை இயக்குநரான நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். அக்ரஹாரத்து பெண், அசைவம் சமைக்கும் சமையல் சூப்பர் ஸ்டார் ஆவதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அனிமல் (இந்தி, தமிழ், தெலுங்கு)

அனிமல்

‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அனிமல்’. ஆக்‌ஷன், கேங்ஸ்டர் திரைப்படமான இது டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

வா வரலாம் வா (தமிழ்)

வா வரலாம் வா

இயக்குநர் எல்.ஜி. ரவிசந்தர், தயாரிப்பாளர் எஸ்.பி.ஆர் இருவரது இயக்கத்தில் ‘பிக் பாஸ்’ பாலாஜி முருகதாஸ், மஹானா சஞ்சீவி, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லீ, காயத்ரி ரெமா, சிங்கம்புலி, சரவண சுப்பையா, தீபா, வையாபுரி, வாசு விக்ரம் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வா வரலாம் வா’. தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சூரகன் (தமிழ்)

சூரகன்

சதீஷ் கீதா குமார் இயக்கத்தில் வி. கார்த்திகேயன், சுபிக்‌ஷா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரகன்’. சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி, ரோட்டில் அடிபட்டுக் கிடக்கும் ஒரு பெண்ணைக் காப்பாற்ற முயல்கிறார். அதனால் அவருக்கு வரும் பிரச்னைகள் என்ன என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நாடு (தமிழ்)

நாடு

ஜெய், அஞ்சலி நடித்த ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் ‘பிக் பாஸ்’ தர்ஷன், மஹிமா நம்பியார், சிங்கம்புலி, ஆர்.எஸ்.சிவாஜி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நாடு’. மலைவாழ் மக்களின் வலியையும், வாழ்வியலையும் நகைச்சுவைப் பாணியில் சொல்வதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Antony (மலையாளம்)

Antony

ஜோஷி இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், கல்யாணி பிரியதர்ஷன், நைலா உஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Antony’. ஆக்‌ஷன், த்ரில்லர் திரைப்படமான இது டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Sam Bahadur (இந்தி)

Sam Bahadur

மேக்னா குல்சார் இயக்கத்தில் விக்கி கௌஷல், சன்யா மல்ஹோத்ரா, பாத்திமா சனா ஷேக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Sam Bahadur’. 1971 இந்தியா – பாகிஸ்தான் போரின் போது ராணுவத் தளபதியாக இருந்த சாம் மனேக்ஷாவின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இத்திரைப்படம் டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வார ஓடிடி

Family Switch (ஆங்கிலம்) – Netflix

Family Switch

McG இயக்கத்தில் ஜெனிபர் கார்னர், எட் ஹெல்ம்ஸ், எம்மா மியர்ஸ் உருவாகியுள்ள ஆங்கிலத் திரைப்படம் ‘Family Switch’. காமெடி நிறைந்த குடும்பத் திரைப்படமான இது நவம்பர் 30ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Candy Cane Lane (ஆங்கிலம்) – Amazon Prime Video

Candy Cane Lane

ரெஜினால்ட் ஹட்லின் இயக்கத்தில் எடி மர்பி, டிரேசி எல்லிஸ், ரோஸ், ஜிலியன் பெல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Candy Cane Lane’. கிறிஸ்துமஸையொட்டி நடக்கும் காமெடி, ஃபேன்டஸி திரைப்படமான இது டிசம்பர் 1ம் தேதி ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

May December (ஆங்கிலம்) – Netflix

May December

டாட் ஹெய்ன்ஸ் இயக்கத்தில் நடாலி போர்ட்மேன், கிறிஸ் டென்சிஸ், சார்லஸ் மெல்டன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கிலத் திரைப்படம் ‘May December’. திருமணமான தம்பதிகளுக்கிடையே நடக்கும் உறவுச் சிக்கல்களைப் பற்றியதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் டிசம்பர் 1ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வார வெப்சீரிஸ்கள்

Dhootha (தெலுங்கு) – Amazon Prime Video

Dhootha

விக்ரம் கே.குமார் இயக்கத்தில் நாக சைதன்யா, பார்வதி, பிரச்சி தேசாய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு வெப்சீரிஸ் ‘Dhootha’. பத்திரிகையாளர் சாகரின் வாழ்க்கையில் நடக்கும் திரில்லான சம்பவங்களும் எதிர்பாராத திருப்புமுனைகளும்தான் இதன் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் டிசம்பர் 1ம் தேதி ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Virgin River Season 5 (ஆங்கிலம்) – Netflix

Virgin River

சூ டென்னி இயக்கத்தில் மார்ட்டின் ஹென்டர்சன், அலெக்ஸாண்ட்ரா பிரெக்கன்ரிட்ஜ், கொலின் லாரன்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தத் தொடரின் நான்கு சீசன்களின் தொடர்ச்சியாக தற்போது ஐந்தாவது சீசன் வெளியாகியுள்ளது. காதல், ரொமான்ஸ் நிறைந்த வெப்சீரிஸான இது நவம்பர் 30ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Shehar Lakhot (ஆங்கிலம்) – Amazon Prime Video

Shehar Lakhot

தேவிகா பகத், நவ்தீப் சிங் இயக்கத்தில் பிரியன்ஷு பைன்யுலி, ஸ்ருதி மேனன், சந்தன் ராய் சன்யால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தொடர் ‘Shehar Lakhot’. திரில்லர் வெப்சீரிஸான இது டிசம்பர் 1ம் தேதி ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Obliterated (ஆங்கிலம்) – Netflix

Obliterated

ஜான் ஹுர்விட்ஸ், ஹெய்டன் ஸ்க்ளோஸ்பெர்க், ஜோஷ் ஹீல்ட் ஆகியோர் ஆக்கத்தில், ஷெல்லி ஹென்னிக், நிக் ஜானோ, டெரன்ஸ் டெரெல் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன், காமெடி நிறைந்த இந்த வெப்சீரிஸ் டிசம்பர் 1ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓடிடி

சித்தா – Disney+ Hotstar

’சித்தா’ படத்தில்…

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன், சஹஸ்ரா ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் `சித்தா’. தன் அண்ணன் மகளுக்கும் சித்தார்த்திற்கும் இடையிலான பாசத்தையும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராடும் சித்தார்த்தின் போராட்டத்தையும் கதைக்களமாகக் கொண்டுள்ள இத்திரைப்படம் ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

800 – Jio Cinema

800 – சினிமா விமர்சனம்

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் ‘800’. எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ நடிகர் மதுர் மிட்டல், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Martin Luther King (தெலுங்கு) – Sony Liv

Martin Luther King

மடோன் அஷ்வின், வெங்கடேஷ் மஹா எழுத்தில் பூஜ கொள்ளுரு இயக்கத்தில் சம்பூர்ணேஷ் பாபு, வி.கே. நரேஷ், சரண்யா பிரதீப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Martin Luther King’. தமிழில் வெளியான ‘மண்டேலா’ படத்தின் தெலுங்கு ரீ-மேக்கான இது, ‘Sony Liv’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Rules Ranjann (தெலுங்கு) – Aha

Rules Ranjann

ரத்தினம் கிருஷ்ணா இயக்கத்தில் அபிமன்யு சிங், அன்னு கபூர், நேஹா ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘Rules Ranjann.’ கட்டுப்பாட்டுடன் வாழும் சாப்ட்வேர் பணியாளரான அபிமன்யூவின் வாழ்க்கை, அவரது பள்ளித் தோழியை மீண்டும் சந்தித்துக் காதலில் விழுந்த பிறகு மாறிவிடுகிறது. அதன் பிறகு அவர் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தது என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் தற்போது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Mission Raniganj (இந்தி) – Netflix

Mission Raniganj

டினு சுரேஷ் தேசாய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், பரினீதி சோப்ரா, ராஜேஷ் சர்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தித் திரைப்படம் ‘Mission Raniganj.’ கனிமச் சுரங்கத்தில் மாட்டிக்கொள்ளும் 60க்கும் மேற்பட்ட பணியாளர்களை அங்கு இன்ஜினியராக இருக்கும் அக்‌ஷய் குமார் அனைவரையும் எப்படிக் காப்பாற்றினார் என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Indiana Jones and the Dial of Destiny (ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு) – Disney+ Hotstar

Indiana Jones and the Dial of Destiny

ஜேம்ஸ் மேன்கோல்ட் இயக்கத்தில் ஹாரிசன் ஃபோர்டுடன் ஃபோப் வாலர்-பிரிட்ஜ், அன்டோனியோ பண்டேராஸ், ஜான் ரைஸ்-டேவிஸ், டோபி ஜோன்ஸ், பாய்ட் ஹோல்ப்ரூக் மற்றும் மேட்ஸ் மிக்கெல்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’ (Indiana Jones and the Dial of Destiny). இத்திரைப்படம் ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

The Equalizer 3 – Netflix

The Equalizer 3

டென்சல் ஹேஸ் வாஷிங்டன் ஜூனியர் நடிப்பில் அன்டோயின் ஃபுகுவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Equalizer 3’. க்ரைம், ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.