IPL 2024 Auction: பென் ஸ்டோக்ஸின் இடத்தை நிரப்ப CSK டார்கெட் செய்யப்போகும் 5 வீரர்கள்

டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடைபெறும் ஐபிஎல் 2024 தொடருக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை டார்கெட் செய்ய திட்டமிட்டிருக்கிறது. சிஎஸ்கே அணியில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார் என்பதால் அவருக்கு நிகரான ஒரு வீரரை சிஎஸ்கே தேடிக் கொண்டிருக்கிறது. அதற்கு யாரையெல்லாம் சிஎஸ்கே ஏலத்தில் எடுக்க முயற்சிக்கும் என்பதை பார்க்கலாம்.  

1. ரச்சின் ரவீந்திரா

2023 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்காக சிறப்பாக விளையாடிய ரவீந்திரா, 578 ரன்கள் குவித்தார். இதன் மூலம் அறிமுக உலக கோப்பை தொடரில் அதிக ரன்களை அடித்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார். 25 வயதுக்குட்பட்ட எந்தவொரு இளம் வீரரும் அறிமுக உலகக் கோப்பை ஒன்றில் இவ்வளவு ரன்கள் அடித்ததில்லை. இவரது ஆல்-ரவுண்டர் திறன், CSK அணிக்கு மிகவும் பொருத்தமானது.

2. அஸ்மதுல்லா ஓமர்சாய்

ஆப்கானிஸ்தான் வீரரான ஓமர்சாய், 2023 உலகக் கோப்பையில் 353 ரன்கள் விளாசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது திறமையை வெளிப்படுத்தினார். அவரது பேட்டிங் மற்றும் பந்துவீச்சுத் திறன், பென் ஸ்டோக்ஸுக்கு சரியான மாற்றாக அமையக்கூடும்.

3. டேரில் மிட்செல்

2023 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்காக சிறப்பாக விளையாடிய மிட்செல், 552 ரன்கள் விளாசி, இரண்டு சதங்கள் அடித்தார். இவரது மிடில் ஆர்டர் ஆட்டம், CSK அணியின் பேட்டிங் பலத்தை மேம்படுத்த உதவும்.

4. கிறிஸ் வோக்ஸ்

பென் ஸ்டோக்ஸுக்கு மாற்றாக ஒரு சிறப்பான ஆல்-ரவுண்டரை தேடும் CSK அணிக்கு, கிறிஸ் வோக்ஸ் சரியான தேர்வாக இருப்பார். 2023 ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடி, சமீபத்தில் நடந்த உலகக் கோப்பையிலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

5. ஜெரால்ட் கோட்ஸீ

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கோட்ஸி மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசக்கூடியவர். இந்த இடத்தை நிரப்ப வேண்டிய அவசியம் CSK அணிக்கு உள்ளது. பென் ஸ்டோக்ஸ் இல்லாத நிலையில், இந்த தேவை மேலும் அதிகரித்துள்ளது. அதனால் இவரை சிஎஸ்கே ஐபிஎல் 2024 ஏலத்தில் டார்கெட் செய்யும். 2023 உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் 20 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த ஐந்து வீரர்களும் CSK அணிக்கு ஏற்றவர்களாக இருப்பினும், ஏலத்தில் எந்த வீரர்களை CSK தேர்வு செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.