2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு விவாதம் (07) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆற்றிய உரை:
பொருளாதார நெருக்கடியிலிருந்து ஓரளவு மீள்வதற்கு உதவிய முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் கொள்கைகள் குறித்து பேசினார். முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி கூறினார். அம்மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளக்கு நாம் ஒரு போது இடமளிப்பதில்லை. அதற்கு எதிராக அன்றும் இன்றும் குரல் கொடுக்க ஒருபோதும் தயங்குவதில்லை. அன்று எதிர்கட்சியில் இருந்த போதும் குரல்கொடுத்தோம். அரசாங்கத்துடன் இன்று இருந்தாலும் இதே நிலைப்பாட்டை நாம் முன்னெடுக்கின்றோம். மீண்டும் நாட்டில் அவ்வாறான நிலை ஏற்படாதவகையில் நாட்டை முன்னெடுப்தற்கு செயல்பட்டுவருகின்றோம். இணையதளம் ஊடாக இனவாத விடயங்களை முன்னெடுத்து இனங்களுக்கிடையியே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
புலம் பெயர்தொழிலாளர்களுக்காக நாம் மின்சார வாகன இறக்குமதிக்கான அனுமதிபத்திர முறையை நடைமுறைப்படுத்தினோம். சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், இந்த நடைமுறை மூலம் 100 மில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட தொகையை புலம்பெயர் ஊழியர்கள் நாட்டுக்கு அனுப்பி இருப்பதாகவும் கூறினார்.
இருப்பினும், இவர்களுக்கான மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் முறைக்கான நாணயக் கடிதங்களை Letter of Credit வழங்குவதில் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
திறைசேரி உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளினால் இந்தக்கடிதங்களுக்கான நீடிப்பு தடைப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் காலத்திலும், மகிந்த ராஜபக்சவின் காலத்திலும் இவ்வாறான அதிகாரிகள் இருந்தனர். இவ்வாறான அதிகாரிகள் எப்பொழுதும் இருக்கின்றனர் . விசேடமாக டொக்டர் கபில சேனாநாயக்க என்பவரும் அங்குதான் இருக்கின்றார்.புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு பணம் அனுப்பக்கூடாது என்று பிரசாரம் செய்யப்பட்ட காலத்தில் இருந்த அதிகாரிகள் இன்றும் அங்கு இருக்கின்றனர். நாடு டொலர் இன்றி சிரமப்பட்ட காலத்தில் டொலர்களை அனுப்பிய மக்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் முறைக்கான நாணயக் கடிதங்களை (Letter of Credit) வழங்குவதில் சிலர் தடையாக இருக்கின்றனர். இவர்கள் எத்தகைய அரசியல் நோக்கத்துடன் செயல்படுகின்றனர் என்பது எமக்கு புரியவில்லை. நாட்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று கூறியவர்கள் போன்று நாட்டை மீண்டும் வங்குரோத்துக்கு உள்ளாக்கும் நோக்கத்தை கொண்டவர்களுடன் நாட்டை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட் டார்.
மக்களை தூற்றுவதற்கும் அவர்கள் மீது தகாத சொல் பிரயோகத்தை மேற்கொள்வதற்கும் குற்றம் சுமத்துவதற்கும் சிலர் முயற்சிக்கின்றனர். எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராகவும் இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. இதனை தடுப்பதற்காக இணைய தள பாதுகாப்பு சட்டம்கொண்டுவரப்படுகிறது. அதனால் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஒரு நாடு மாற வேண்டுமானால்,மக்கள் சட்டத்தை மதிக்கும் ; குழுவாக மாற வேண்டும்.அதனால் தான் இப்படி ஒரு சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது. நாட்டின் டொலர் கையிருப்பு வீழ்ச்சியடைந்திருந்த வேளையில் நாம் நாட்டின் நிருவாகத்தை பொறுப்பேற்றோம்.நாட்டுக்கு பணம் அனுப்பக் கூடாது என்பது மறைமுகமாகவும் பணம் அனுப்பாவிட்டால் நாட்டையே வீழ்த்தி விடலாம் என்றும் அரசியல் கட்சித் சில ர் கூறினர். உண்டியல் மூலம் டொலர்களை அனுப்பச் சொன்னார்கள் நாட்டை வீழ்த்திவிடலாம் என்று இவர்கள் நினைத்தனர்..
இயலுமானவர்கள் முடிந்தவகையில் வாழவேண்டியது தான் வாழ முடியாதவர்கள் வாழ முடியாத நாடாக மாறியது. நாம் இதை மாற்ற வேண்டுமல்லவா? இதை மாற்ற வேண்டும். இதை மாற்ற முடியாதவனுக்காக மரகதத்தை ஓதி ஏமாற்றவில்லை. ஒருவரின் திறமையை முடிந்தவரை மிகைப்படுத்தி மதிப்பிட முடியாது. உண்மை நிலையை எடுத்துக்காட்டி உண்மையை எதிர்கொள்ளுங்கள். உங்களிடமிருந்து தொடங்குதல். அந்த முட்டுக்கட்டையை அகற்றி தன்னைத் தானே புனரமைத்துக் கொண்டிருக்கும் ஒரு நாட்டின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் பற்றி நாம் பேசுகிறோம்.
நாடு அன்று எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உண்மைக்குப் புறம்பான விடயங்களை தெரிவித்து புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டுக்கு பணம் அனுப்பவேண்டாம் என சிலர் வலியுறுத்தினர்.அந்தக்காலப்பகுதியில் விளப்பரங்களைக்கூட வெளியிட பணம் இருக்க வில்லை. சட்ட விதிகளுக்கு மாறாக உண்டில் மூலம் நாட்டுக்கு பணம் அனுப்பப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையில் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக புலம் பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு பணம் அனுப்ப ஆரம்பித்தனர். உண்மைக்கு புறம்பான விடயங்களை கூறி அரசில் இலாபம் பெற முயற்சிக்கக் கூடாது.
நாட்டுக்கு டொலர்களை அனுப்புவதன் தேவையை புலம்பெயர் தொழிலாளர்களிடம் தெளிவுபடுத்தினோம்.அவர்கள் தாமாகவே இதற்காக முன்வந்தார்கள். கடந்த ஒக்டோபர் மாதம் வரையில் 7.6 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பில் நாம் மேற்கொண்ட முயற்சிக்கு தூதரக அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.இதேபோன்று வெளிநாடுகளும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கின. இதற்காக நாம் நன்றி தெரிவிக்கின்றோம். சர்வதேச தொழில் அமைப்பு மற்றும் இதர அமைப்புக்களுக்கும் நாம் நன்றி கூட கடமைப்பட்டுள்ளோம்.
கடந்த வருடத்தில் கொரியாவிற்கு தொழிலுக்காக சென்றவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 636 ஆகும் இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் இங்கு தொழிலுக்காக சென்றவர்களின் எண்ணிக்கை 5,414. இஸ்ரேலுக்கு 536 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதிநிதித்துவத்தை ஒழுங்கமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வீட்டுப்பணிப்பெண் சேவைக்காக அனுப்பப்படுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு முடிந்துள்ளது.
இதேவேளை, ஆட் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக விமான நிலையத்தில் தனி பாதுகாப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வெளியுறவு அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் ஆட்கடத்தலுக்கு எதிரான அதிரடிப்படையாக செயல்படுகின்றன. இதன் ஊடாக ஆள் கடத்தலை குறைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு சென்றவர்கள் தொடர்பில் ஆணி அடித்து தாக்கப்பட்மை கொலை செய்ததான குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் நாங்கள் இதுவரை 5,454 முறைப்பாடுகளை பெற்றுள்ளோம். இத்தொகை புலம்பெயர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையில் இரண்டு சதவீதம் மற்றும் பத்தில் ஒரு பங்காகும். இவை அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்தும் வருகின்றன. அமைச்சரவையின் விசேட அங்கீகாரத்துடன் ஓமானுக்கு விதிகளுக்கு மாறாக சென்ற 59 பேரை அழைத்துவர 23 லட்சம் செலவழிக்க வேண்டியிருந்தது.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் பெறப்படும் கமிஷன் பணத்தை கூட வங்கிகள் மூலம் கொண்டு வர வேண்டும் என்றனர். மேலும் இது தொடர்பான விசாரணைகளும் நடத்தப்பட்டன. பல்நோக்குக் கடன் திட்டத்தின் மூலம், புலம்பெயர் தொழிலாளர்கள் 8 சதவீத சலுகை வட்டியில் இரண்டு மில்லியன் ரூபா வரை கடனை பெற்றுக்கொள்ளுவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து வீட்டுத்திட்டத்தை இவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆரம்ப கட்ட பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில் ஹோப் கேட் என்ற சிறப்பு போர்டல் பிரிவு விமான நிலையத்தில் திறக்கப்பட்டுள்ளது. அங்கு எமது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மேலதிக மருத்துவ வசதிக்கும், அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல உதவுவதற்கும் தேவையான திட்டத்தையும் மேற்கொண்டுள்ளோம்.
புலம் பெயர்ந்த தாய் தந்தையரின் பிள்ளைகளுக்காக பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாடு தழுவிய ரீதியில் முனனெடுக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகல் மற்றும் கரந்தேணியில் முதல் இரண்டு பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் திறக்கப்பட்டன. ஆறு தடவைகளுக்கு மேல் நாட்டிற்காக சேவையாற்றுவதற்காக பதிவுசெய்து வெளிநாடு சென்ற தொழிலாளர்களுக்கு வவுச்சர்கள் வழங்கப்பட்டன. அதற்காக ஐந்து இலட்சம் ரூபா பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.