புதுடெல்லி: இந்திய கடற்படையில் உயர்பொறுப்பு வகித்து ஓய்வு பெற்ற 8 முன்னாள் அதிகாரிகளை கத்தார் அரசு கடந்த ஆண்டு கைது செய்துசிறையில் அடைத்தது. அவர்களுக்கு கத்தார் நீதிமன்றம் கடந்தஅக்டோபர் மாதம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்துஇந்திய அரசு கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்தச் சூழலில், டிசம்பர் 1-ம்தேதி காலநிலை மாற்றம் தொடர்பாக துபாயில் நடைபெற்ற சிஓபி28உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானியும் சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், டிசம்பர் 3-ம்தேதி முதன் முறையாக, சிறையில்அடைக்கப்பட்ட 8 இந்தியர்களை தூதரக அதிகாரி நேரில் சந்தித்தார்.
இந்திய கடற்படையில் பணியாற்றிய முன்னாள் கேப்டன்களான நவ்ஜீத் சிங் கில், பிரேந்திர குமார்வர்மா, சவுரப் வசிஸ்த் ஆகியோருக்கும் முன்னாள் கமாண்டர்களான அமித் நாக்பால், புர்னெது திவாரி, சுகுனாகர் பாகலா, சஞ்சீவ் குப்தா மற்றும் ராகேஷ் கத்தாரில் ‘தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்ட்கன்சல்டென்சி சர்வீசஸ்’ என்றதனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்த நிறுவனம் கத்தார் கடற்படை தொடர்புடைய நீர்மூழ்கி கப்பல் திட்டம் ஒன்றில் செயல்பட்டு வந்துள்ளது. .
இந்நிலையில், இந்த நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் தொடர்பான ரகசியவிவரங்களை இந்த 8 அதிகாரிகள் இஸ்ரேல் அரசுடன் பகிர்ந்துகொண்டதாகவும் இதனால், கத்தார் அரசு இவர்களைக் கைது செய்ததாகவும் தகவல்கள்தெரிவிக்கின்றன. ஆனால், அவர்களது கைதுக்கான காரணத்தை கத்தார் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.