Presidential Election in Russia: March 17, 2024 | ரஷ்யாவில் அதிபர் தேர்தல்: 2024 மார்ச் 17 நடக்கிறது

மாஸ்கோ : ரஷ்யாவில் 2024 ல் தற்போதைய அதிபர் விளாடிமிர்புடின் பதவி காலம் முடிவதால் மார்ச் 17 ல் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது உறுதி என அதிபர் விளாடிமிர்புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் 1999ம் ஆண்டு டிசம்பரில் அதிபராக இருந்த போரிஸ் யெல்ட்சின் பதவி விலகினார். தற்காலிக அதிபராக விளாடிமிர்புடின் பதவி ஏற்றார். 2000-ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரப்பூர்வ அதிபராக புடின் பொறுப்பேற்றார். இவரது பதவி காலம் 2024 மே மாதம் நிறைவடைகிறது.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் தேர்தலை 2024 மார்ச் 17ல் நடத்துவது என பாராளுமன்ற மேல்சபை கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது.

இதையடுத்து அதிபர் புடின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2024 அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடுவது உறுதி என தெரிவித்துள்ளதாக அவரது கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இதன் மூலம் புடின் 5-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.