Surprised to see Modi Russian President Vladimir Putin praises | மோடியை பார்த்து ஆச்சரியப்படுகிறேன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புகழாரம்

புதுடில்லி, பிரதமர் நரேந்திர மோடியை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெகுவாக பாராட்டி பேசும் காட்சிகள் சமூக வலைதளங்களில், வேகமாக பரவி வருகின்றன.

இந்தியா – ரஷ்யா இடையிலான உறவு, முன் எப்போதும் இருந்ததை விட தற்போது வலுப்பெற்றுள்ளது.

கடந்த மாதம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடந்த, ‘ஜி – 20’ நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய ரஷ்ய அதிபர் புடின், செப்., 9 – 10ம் தேதிகளில் புதுடில்லியில் நடந்த, ‘ஜி – 20’ உச்சி மாநாட்டை இந்தியா மிக சிறப்பாக தலைமையேற்று நடத்தியதற்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேசும் காணொளி காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

‘ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட அந்த 45 வினாடி உரையில், புடின் பேசியுள்ளதாவது:

ரஷ்யா – இந்தியா இடையிலான உறவு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளே இந்த வளர்ச்சிக்கான உத்தரவாதமாக உள்ளது.

உண்மையைச் சொல்வதென்றால், இந்திய மக்களின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடி எடுக்கும் கடுமையான நிலைப்பாடுகளை பார்த்து, பல சந்தர்ப்பங்களில் ஆச்சரியம் அடைந்துள்ளேன்.

இந்தியா மற்றும் இந்திய மக்களின் நலனுக்கு எதிராக மோடியை மிரட்டியோ, அச்சுறுத்தியோ முடிவெடுக்க வைக்க வற்புறுத்தலாம் என, என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அவ்வாறான அழுத்தங்கள் அவருக்கு உள்ளன என்பது எனக்கு தெரியும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இந்த சமூக வலைதள பதிவு, உலகம் முழுதும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.