Nawaz Sharif Says He Was Ousted In 1999 For Opposing Kargil Plan | கார்கில் ஊடுருவலை எதிர்த்ததால் பிரதமர் பதவி பறிபோனது: நவாஸ் ஷெரீப் கண்டுபிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இஸ்லாமாபாத்: கடந்த1999ம் ஆண்டு, பாகிஸ்தான் ராணுவத்தின் கார்கில் ஊடுருவல் திட்டத்தை எதிர்த்ததால் தான் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டேன் என அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,1993 மற்றும்1999ம் ஆண்டுகளில் நான் ஏன் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டேன் என அனைவரிடமும் கூற வேண்டும். ராணுவத்தின் கார்கில் ஊடுருவல் திட்டத்தை நான் எதிர்த்தேன். அது நடக்கக்கூடாது என்றேன். இதனால், அப்போதைய ராணுவ தளபதி முஷாரப், என்னை பிரதமர் பதவியில் இருந்து அகற்றினார். கடைசியில் நான் சொன்னது தான் சரி என்பது நிரூபணம் ஆனது.

நான் பிரதமர் பதவியில் இருந்த போது தான், இரண்டு இந்திய பிரதமர்கள் பாகிஸ்தான் வந்தனர். நரேந்திர மோடியும், வாஜ்பாயும் லாகூர் வந்தனர். இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளுடன் உறவை வலுப்படுத்த வேண்டும். சீன உறவை இன்னும் வலுவாக்குவது முக்கியம்.

இம்ரான் கான் பிரதமர் ஆக இருந்த போது, பொருளாதாரம் சரிய துவங்கியது. ஷெபாஸ் ஷெரீப் பதவிக்காலத்தில் நாடு திவால் ஆவதில் இருந்து தடுக்கப்பட்டது. இவ்வாறு நவாஸ் ஷெரீப் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.