The woman who voted for BJP was mercilessly chased away by the family | பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த பெண்ணை இரக்கமின்றி விரட்டியடித்த குடும்பத்தினர்

போபால், மத்திய பிரதேசத்தில் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த முஸ்லிம் பெண்ணை, அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு விரட்டிய நிலையில், அவரை தன் வீட்டிற்கு வரவழைத்து முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசினார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுகளை எண்ணியதில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆளும் பா.ஜ., 163 இடங்களில் வென்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது.

முன்னதாக, இம்மாநிலத்தைச் சேர்ந்த சமீனா என்ற பெண், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தார். இதையறிந்த அவரது குடும்பத்தினர், அவரை வீட்டை விட்டு வெளியேற்றினர்.

தன் இரு குழந்தைகளுடன் அந்த பெண் தவித்து வருவதை அறிந்த முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், அவரை தன் வீட்டிற்கு வரவழைத்து நேற்று பேசினார்.இச்சந்திப்புக்குபின் அந்த பெண் கூறியதாவது:

அரசியலமைப்பு சட்டத்தின்படி, நாம் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டளிக்கும் உரிமை உள்ளது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், தன் ஆட்சிக்காலத்தில் எவ்வித தவறும் செய்யாத நிலையில், அவருக்கு நான் ஓட்டளித்தேன். எனக்கும், என் குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிப்பதாக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உறுதியளித்துஉள்ளார்.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.