ரொம்ப ஆபத்து… இந்த செயலிகள் உங்களிடம் உள்ளதா – உடனே டெலிட் செய்யுங்கள்!

Dangerous Apps: செயலிகள்தான் ஸ்மார்ட்போனில் நமது செயல்பாடுகளை ஒருங்கிணைப்பவை எனலாம். நீங்கள் தினமும் தண்ணீர் குடிப்பது நினைவூட்டது தொடங்கி, உங்களின் வாழ்க்கை துணையை தேடுவது வரை பல வகையான செயலிகள் ஆண்ட்ராய்டில் குவிந்து கிடக்கின்றன. ஆண்ட்ராய்டை பொருத்தவரை செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் அந்த நிறுவனங்களின் தளங்களில் நேரடியாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இவைதான் அதிகாரப்பூர்வமான, முறையான செயலிகளாக பார்க்கப்படுகின்றன.

கடன் வழங்கும் செயலிகளால் வரும் ஆபத்து… 

வேறு மூன்றாம் தர பிரௌசர்களில் இருந்தோ அல்லது கூகுள் தேடலின் மூலமோ தரவிறக்கம் செய்யப்படும் செயலிகள் உங்கள் சாதனங்களுக்கும், உங்களுக்கும் தீங்கு விளைவிக்கலாம். உங்களின் தனிப்பட்ட தகவல்கள் மட்டுமின்றி பல விஷயங்களை நீங்கள் பறிகொடுக்க நேரிடும். இருப்பினும், சில அபாயகரமான செயலிகள் பிளேஸ்டோரிலேயே இருப்பதும் இங்கே காணப்படுகிறது. அடிக்கடி அதனை சரிபார்த்து அந்த அபாயகரமான செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்கும்.  

அந்த வகையில், சமீபத்தில் கூகுள் நிறுவனம் அதன் பிளேஸ்டோரில் இருந்து 18 செயலிகலை கூகுள் நீக்கியுள்ளது, அதை மில்லியன் கணக்கான மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். ESET அறிக்கையின்படி, இந்தாண்டு 18 செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் SPYLOAN என அடையாளம் காணப்பட்டுள்ளன, அதாவது, இந்த செயலிகள் மக்களிடம் இருந்து கடன் வழங்குவதற்கு வடிவமைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஆனால் உண்மையில் செயலிகள் பயனரை உளவு பார்க்க பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நாட்டினர்தான் டார்கெட்

இந்த செயலிகள் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் இருந்து அவர்களின் தொடர்பு விவரங்கள், இருப்பிடத் தரவு மற்றும் பிரௌசிங் ஹிஸ்டரி போன்ற பெரிய அளவிலான தகவல்களைச் சேகரிக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை வைத்து, அவர்கள் பயனர்களை மிரட்டி அதிக வட்டியை வாங்கி பணமோசடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Spyloan செயலிகள் சமூக ஊடகங்கள் மற்றும் எஸ்எம்எஸ் செய்திகள் மூலம் சந்தைப்படுத்தப்படுகின்றன. இந்த ஆப்ஸ் பிரத்யேக மோசடி இணையதளங்கள், மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்கள் மற்றும் கூகுள் பிளேஸ்டாரில் இருந்தும் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

பயனர்களை ஏமாற்றும் கடன் வழங்கும் செயலிகளின் விவரங்களை ESET ஆராய்ச்சியாளர்கள் பகிர்ந்துள்ளனர். இந்த கடன் வழங்கும் செயலிகள் என்பது மக்களுக்கு கடன் கொடுத்து, அதனை அதிக வட்டியுடன் திருப்பித் தரும்படி கட்டாயப்படுத்துபவர்கள். அவர்கள் பெரும்பாலும் மோசடி மற்றும் மிரட்டி பணம் பறிப்பதில்தான் இந்த செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த செயலிகள் தென் அமெரிக்க நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் பயனர்களை அதிகமாக குறிவைப்பதாக கூறப்படுகிறது. 

17 ஆப்ஸ் நீக்கப்பட்டது

கூகுள் நிறுவனத்திற்கு 18 ஆப்ஸ் பற்றிய தகவல்களை தங்களுக்கு வழங்கியுள்ளதாக  ESET நிறுவனம் தெரிவித்துள்ளது. அவற்றில் 17 ஆப்ஸை கூகுள் நீக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் ஆப்ஸின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டிருப்பதால், அதே செயல்பாடுகளையோ அதே அனுமதிகளையோ வழங்காததால், ஒரு செயலி மட்டும் இன்னும் பிளேஸ்டோரில் உள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகிள் இந்த செயலிகளை அகற்றியுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் இந்த செயலிகளை தங்கள் மொபைலில் வைத்திருந்தால் உடனடியாக டெலிட் செய்து விடவும். கூகுள் அதன் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கிய அந்த 17 செயலிகளை இங்கு காணலாம். 

– AA Kredit
– Amor Cash
– GuayabaCash
– EasyCredit
– Cashwow
– CrediBus
– FlashLoan
– PréstamosCrédito
– Préstamos De Crédito-YumiCash
– Go Crédito
– Instantáneo Préstamo
– Cartera grande
– Rápido Crédito
– Finupp Lending
– 4S Cash
– TrueNaira
– EasyCash

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.