Gogoro Crossover Escooter – கோகோரோ கிராஸ்ஓவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக விபரம்

தாய்வான் நாட்டை தலைமையிடமாக கொண்ட கோகோரோ நிறுவனம் முதற்கட்டமாக இந்தியாவில் வர்த்தரீதியாக பயன்பாடிடற்கான பேட்டரி ஸ்வாப் மற்றும் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ள நிலையில், புதிய கிராஸ்ஓவர் என்ற பெயரில் சுமைகளை எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைப்பினை பெற்ற ஸ்கூட்டரை டிசம்பர் 12 ஆம் தேதி விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

இந்த ஸ்கூட்டர் வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு மட்டுமா அல்லது தனிநபர் பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படும் என உறுதியாக தற்பொழுது அறிவிக்கப்படவில்லை.

Gogoro Crossover Escooter

கடந்த அக்டோபர் மாதம் சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட கோகோரோ கிராஸ்ஓவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அல்டிமேட் டூவீலர் எஸ்யூவி என இந்நிறுவனம் அழைக்கின்றது. குறிப்பாக ஆஃப்ரோடு மற்றும் ஆஃப்ரோடு பயன்பாடுகளும் ஏற்றது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அகலமான பாடி பேனலுடன் அதிக இடவசதி பெற்ற ஃபுளோர் போர்டு மற்றும் மடக்கும் வகையில் இருக்கையை கொண்டுள்ளதால், பின்புற இருக்கையை மடக்கினால் மிக தாராளமான இடவசதி கிடைப்பதனால் லக்கேஜ் பாக்ஸ் வைப்பதற்கான கேரியர் இடம்பெற்றுள்ளது.

பல்வேறு சாலைகளில் பயனிக்க ஏற்ற வகையிலான ஆஃப் ரோடு டயர்கள் மற்றும் சிறப்பான சஸ்பென்ஷனை கொண்டதாகவும், கிராஸ்ஓவர் ஸ்கூட்டரில்  7.5KW மின்சார மோட்டார் பொருத்தப்பட்டு இரண்டு 1.6KWH இலகுவாக மாற்றக்கூடிய பேட்டரி பேக் மூலம் இயக்கப்பட்டு முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 100 கிமீ தூரம் வரை செல்ல முடியும்.

விலை உட்பட பல்வேறு நுட்பவிபரங்கள் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.