American teenager sentenced to 2 years in prison | அமெரிக்க இளைஞருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

மஹராஜ்கஞ்ச்:போலி விசா வாயிலாக நம் நாட்டுக்குள் நுழைய முயன்ற அமெரிக்க இளைஞருக்கு, உத்தர பிரதேச நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

இதுகுறித்து, உ.பி., மாநிலம் மஹராஜ்கஞ்ச் மாவட்ட கூடுதல் எஸ்.பி., அதிஷ் குமார் சிங் கூறியதாவது:

கடந்த மார்ச் 29ம் தேதி நேபாள எல்லையில் குடியுரிமைத் துறையினர் நடத்திய சோதனையின் போது, அமெரிக்காவைச் சேர்ந்த எரிக் டேனியல் பெக்வித்,36, என்பவரின் விசா போலி என கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர், போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.

வெளிநாட்டினர் சட்டம் 14வது பிரிவின் கீழ் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

விதிமுறைப்படி அமெரிக்க தூதரகம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த, மஹராஜ்கஞ்ச் மாவட்ட தலைமை நீதிபதி சவுரவ் ஸ்ரீவஸ்தவா, அமெரிக்க இளைஞர் எரிக் டேனியல் பெக்வித்துக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 15 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.