![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/12/1702242794_NTLRG_20231210131532226813.jpg)
ரஜினி பிறந்தநாளில் ஸ்டார் படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது!
இளன் இயக்கத்தில் கவின் 'ஸ்டார்' என்கிற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என இரு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர் என ஏற்கனவே அறிவித்து இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்பை, சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று இப்படத்திலிருந்து போட்டோ ஆல்பம் என ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். இதன் மூலமாக இதில் கதாநாயகியாக அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன் என இருவரும் நடிக்கின்றனர். லால், கைலாசம் கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வருகின்ற டிசம்பர் 12ம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.