
டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி'
திருமணம், ராஜா ராணி போன்ற சீரியல்களில் நடித்த நடிகர் சித்து, ‛அகோரி' படத்தின் மூலம் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக ‛144' படத்தில் நடித்த ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார். மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே.மேனன் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் டி.எஸ்.ராஜ்குமார் இயக்கியிருக்கிறார்.
சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே இப்படத்தின் கதை. இதற்காக ஹரித்துவார் செட் மற்றும் கேரளாவின் காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு அகோரிகள் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டன. இப்படம் யு/ஏ தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ளது. வரும் டிசம்பர் 15ல் படம் வெளியாகிறது.