காபுல்,
ஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.04 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 151 கிலோ மீட்டர் தெற்கு – தென்கிழக்கில் சுமார் 180 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தானில் இந்த மாதம் 5 ஆம் தேதி ரிக்டர் 4.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அக்டோபரில், ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் ரிக்டர் 6.3 அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 4,000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்தன.