புதுடில்லி: பணியிட நியமனம் வழங்கப்படும் நேரத்தில் ஒரு மாவட்ட நீதிபதி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக பெண் நீதிபதி புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் அறிக்கை கேட்டுள்ளார்.
உத்திரபிரதேசம் பாண்டா என்ற மாவட்டத்தின் பெண் நீதிபதி (பெயர் வெளியாகவில்லை) ஒருவர் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாராபங்கி என்ற பகுதியின் நீதிபதியாக எனக்கு பணி வழங்கப்பட்டது. முன்னதாக மாவட்ட நீதிபதி என்னை இரவு சந்திக்குமாறு வர சொன்னார். மிகவும் கீழ்த்தரமான முறையில் என்னை நடத்தினார்.
பாலியல் தொல்லை கொடுத்தார். குப்பை தொட்டியை விட ,ஒரு பூச்சியை விட கேவலமாக நடத்தப்பட்டேன். இதனால் மன உளச்சலுக்குள்ளானேன். ஐகோர்ட் மேலிடத்திற்கு கடந்த ஜூலை மாதம் புகார் அளித்தேன். ஆனால் இது அலட்சியப்படுத்தப்பட்டது. போலியான நடவடிக்கை எடுப்பதாக உணர்கிறேன். இது தொடர்பான விசாரணை நிலுவையில் இருப்பதால் அவரை மாவட்ட நீதிபதியில் இருந்து மாற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் நியாயமான தீர்ப்பு கிடைக்காது. இனியும் வாழ எனக்கு விருப்பமில்லை.. தற்கொலை செய்து கொள்ள அனுமதி தாருங்கள். இவ்வாறு பெண் நீதிபதி கூறியுள்ளார்.
இவரது கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது .இது தொடர்பாக முழு அறிக்கை கேட்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதி சந்திரசூட் அலகாபாத் ஐகோர்ட்டுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement