டி20 உலகக் கோப்பையில் இந்த 3 வீரர்களின் இடம் கன்பார்ம்… சாம்பியன் ஆக இவர் ரொம்ப முக்கியம்!

India National Cricket Team: ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்றது. இந்திய அணி தொடர்ந்து 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டி வரை முன்னேறியது. ஆனால், ஆஸ்திரேலிய அணி இந்தியாவின் உலகக் கோப்பை கனவுக்கு பெரும் முட்டுக்கட்டையை போட்டது. இறுதிப்போட்டியை இந்திய அணி சம்பவம் செய்து அதன் 6ஆவது உலகக்கோப்பையையும் தட்டித்தூக்கியது.

இந்திய டி20 அணியில் பல மாற்றங்கள்…

கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கும் இந்திய அணியின் (Team India) ஐசிசி கோப்பை இன்னும் நீடிக்கும் நிலையில், அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) மீது இந்தியாவின் முழு கவனமும் தற்போது குவிந்துள்ளது. தோனி தனது ஐசிசி கோப்பை வேட்டையை டி20 உலகக் கோப்பையில் இருந்துதான் தொடங்கினார். அந்த வகையில், இந்திய அணி டி20 அணியின் கட்டமைப்பில் இருந்து ஆட்ட அணுகுமுறை வரை பல மாற்றங்களை இந்திய அணி செயல்படுத்தி உள்ளது.

ஒதுங்கியிருக்கும் சீனியர் வீரர்கள்

குறிப்பாக, கடந்த 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் (KL Rahul) ஆகியோர் சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் விளையாடவே இல்லை. மேலும், ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தோல்விக்கு பின் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி (Virat Kohli) ஆகியோரும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருக்க பிசிசிஐயிடம் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

பாண்டியாவின் வருகை?

அந்த வகையில், தற்போதைய இந்திய டி20 அணியின் கேப்டன் யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியாது. ரோஹித் சர்மாவுக்கு (Rohit Sharma) பின் ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் எனலாம். ஆனால், உலகக் கோப்பை தொடரில் பாண்டியாவின் காயம், கேப்டன்ஸியை சூர்யகுமாரின் கைகளில் ஒப்படைக்க வழிவகுத்தது. தற்போது சீனியர் வீரர்களாக ஜடேஜா இருந்தாலும் அவருக்கு துணை கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்குள் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) அணிக்குள் வரும்பட்சத்தில் ஆறாவது பந்துவீச்சாளர் ஆப்ஷன் கிடைக்கும். பந்துவீச்சு காம்பினேஷன்படி இந்திய அணியால் வீரர்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

பிளேயிங் லெவனில் இவர்கள்தான் இருப்பார்கள்…

யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal), சுப்மான் கில் (or) ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா (or) ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் (or) ஜிதேஷ் சர்மா, ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, குல்தீப் யாதவ் (or) ரவி பீஷ்னோய், சிராஜ் (or) முகேஷ் குமார், தீபக் சஹார் (or) அர்ஷ்தீப் சிங்  ஆகிய பிளேயிங் லெவன் காம்பினேஷன்தான் டி20 உலகக் கோப்பையில் தொடரும் என கணிக்கப்படுகிறது. இதில், ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், பும்ரா ஆகியோருக்கு இடம் கிடைப்பது அரிதுதான். 

அதிலும், ஜெய்ஸ்வால், சூர்யகுமார், ரிங்கு சிங் (Rinku Singh) ஆகியோரின் இடம் உலகக் கோப்பை வரை உறுதியாகி உள்ளது எனலாம். ஓப்பனிங்கில் இறங்கி பவர்பிளேவில் அதிரடி காட்ட ஜெய்ஸ்வால், மிடில் ஓவர்களில் மிரட்டும் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav), பக்காவாக ஃபினிஷ் செய்யும் ரிங்கு சிங் என இந்தியா உலகக் கோப்பையை வெல்ல இந்த மூன்று வீரர்களின் பங்கு அதிமுக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐபிஎல் தொடரும் கணக்கில் வரும்…

இருப்பினும், இன்னும் ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு பின்னர் உலகக் கோப்பை வரை இந்திய அணி சர்வதேச அளவில் டி20 போட்டிகளை விளையாடப்போவதில்லை. ஆனால், டி20 உலகக் கோப்பைக்கு முன் ஐபிஎல் தொடரை (IPL 2024) விளையாட உள்ளதால், அதில் இந்த வீரர்களின் அணுகுமுறை, ஃபார்ம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய ஸ்குவாட் உருவாகும் எனலாம். ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்தாண்டு ஜூன் 4ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.