Parli., Violation case: Lalit Jha remanded to 7-day police custody | பார்லி., அத்து மீறல் வழக்கு: லலித் ஜாவுக்கு 7 நாள் போலீஸ் காவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : பார்லிமென்ட் அத்துமீறல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான லலித் ஜா டில்லி போலீசில் சரணடைந்தார். அவரை 7 போலீஸ் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.

கடந்த 13-ம் தேதி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது லோக்சபாவின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து சபைக்குள் குதித்த மனோரஞ்சன்,34 சாகர் சர்மா ,27 ஆகிய இருவரும் லோக்சபாவிற்கு மஞ்சள் புகையை பரவிட்டனர். இதனால் அங்கிருந்த எம்.பி.க்கள் அதிர்ச்சியடைந்து வெளியேறினர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை தொடர்ந்து நீலம் ஆசாத் 37. அமோல் ஷிண்டே 25. என நான்கு பேர் கைதாகினர்.
இவர்கள் பாட்டியாலா கோர்ட்டில்ஆஜர்படுத்தபட்டு 7 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முக்கிய குற்றவாளியும் திட்டம் வகுத்து தந்ததாக பீஹாரைச் சேர்ந்த லலித் ஜா என்பவர் தலைமறைவானார். இவரை போலீசார் தேடிவந்த நிலையில் டில்லி போலீசிடம் சரணடைந்தார். தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 7 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.