சிக்கமகளூரு : சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், முதல் முறையாக நேற்று தத்த மாலை அணிந்தார். இன்று தத்த மாலை அணிந்த பக்தர்களின் பிரமாண்டமான ஊர்வலம் நடப்பதால், உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிக்கமகளூரில் இன்று தத்த மாலை இயக்க ஊர்வலம் நடக்கிறது. இதற்காக, பல்வேறு ஹிந்து அமைப்பினர் நேற்று தத்த மாலை அணிந்தனர்.
குறிப்பாக, மத்திய விவசாய துறை இணை அமைச்சர் ஷோபா, முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி ஆகியோர் வழக்கம் போல் மாலை அணிந்து கொண்டனர். அங்கு நடந்த ஹனுமன் ஜெயந்தி விழாவில், இருவரும் நடனமாடி ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தினர்.
இதற்கிடையில், இந்தாண்டு புதிதாக, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், தத்த மாலை அணிந்து கொண்டார். பின்னர் நடந்த இரவு பஜனையில் பங்கேற்றார்.
இன்று தத்த மாலை ஊர்வலம் நடப்பதால், இரண்டு நாட்களுக்கு முன்னரே, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊர்வலத்தின் போது, பத்து அடிக்கு ஒரு போலீஸ் வீதம் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊர்வலத்தை ஒட்டி, சிக்கமகளூரு நகரம் முழுதும் காவி தோரணங்கள், கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement