புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
நாட்டின் மிக முக்கிய பிரச்சினை, வேலையில்லா திண்டாட்டம்தான். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் அளிப்பதாக சொன்னது என்ன ஆனது என்று இளைஞர்கள் கேட்கிறார்கள். போட்டித்தேர்வுக்கும், வேலை பெறுவதற்கும் இடையிலான நடைமுறை ஏன் இவ்வளவு சிக்கலாக இருக்கிறது என்றும் கேட்கிறார்கள்.
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான தொழிலாளர் நல ஆய்வில், 15 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்டோரிடையே வேலையின்மை விகிதம் 10 சதவீதமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 15 வயது முதல் 19 வயது வரையிலான நபர்களிடையே கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் 8.3 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 13.8 சதவீதமாகவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அழிக்கப்பட்டது ஏன்?. அதனால், கோடிக்கணக்கான இளைஞர்களின் வேலைகள் பறிக்கப்பட்டன. அவர்களின் எதிர்காலம் அழிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.