ஹலசூரு, : கர்நாடக தேவர் சங்கத்தின், 14ம் ஆண்டு குடும்ப விழா, 2024ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, பெங்., ஹலசூரில் உள்ள பெங்களூரு தமிழ் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில் நேற்று நடந்தது.
சங்க தலைவர் சுப்பையா தேவர் தலைமை வகித்தார். பொது செயலர் ரவீந்திரன் தேவர் வரவேற்றார். மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்க தேவர் படத்துக்கு, நிர்வாகிகள் மலர் துாவி வணங்கினர்.
திருவண்ணாமலை பட்டிமன்ற பேச்சாளர் பாக்யலட்சுமி சிறப்புரை ஆற்றினார். விழாவில், 2024ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு, பதவியேற்று கொண்டனர்.
தற்போதைய தலைவர் சுப்பையா தேவர் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
இவரை பெங்களூரு மாநகராட்சி முன்னாள் கல்வி நிலைக்குழு தலைவர் தன்ராஜ் உட்பட பலர் பாராட்டினர். சங்கத்தின் கடந்த கால செயல்பாடுகள், வருங்கால திட்டம் குறித்து தலைவர் விளக்கினார். பின், 2024ம் ஆண்டிற்கான காலண்டர் வெளியிடப்பட்டது.
சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் கந்தன் தேவர், பாபு தேவர், மணிகண்டன் தேவர், ஹிந்து நாடார் சங்க செயலர் கிருஷ்ணவேணி, சுரேஷ் குமார், பெங்., தமிழ் சங்க முன்னாள் செயலர் ராமசுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement