"தூரத்தைக் காரணம் காட்டி பள்ளிச் சேர்க்கையை மறுப்பதா?” – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோவை மாவட்டம் வால்பாறையில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் தன் மகனுக்கு, அங்குள்ள பியூலா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 25 சதவீத ஒதுக்கீட்டில் இடமளிக்கக் கோரி கடந்த 2022 மே மாதம் விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த பள்ளி நிர்வாகம், லட்சுமணனின் வீடு பள்ளியிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு அப்பால் இருப்பதாக கூறி, அவரின் விண்ணப்பத்தை நிராகரித்தது. இதையடுத்து கல்விக் கட்டணத்தை செலுத்தி தன் மகனை எல்.கே.ஜி வகுப்பில் சேர்த்துள்ளார்.

அனிதா சுமந்த்

இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கப்படாததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்  லட்சுமணன் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, பள்ளியின் இருப்பிடம், தூரம் குறித்த விதிகள் கட்டாயமில்லை. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இடங்கள் காலியாக இருந்தால், நிர்ணயிக்கப்பட்ட தூரத்திற்கு அப்பால் உள்ளவர்களையும் சேர்க்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெளிவுபடுத்தி உள்ளது. 

இந்த பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட 16 இடங்களில் 2022-23 மற்றும் 2023-24 ஆம் கல்வியாண்டுகளில் முறையே 3  மற்றும் 8 இடங்கள் காலியாக உள்ளது. காலியிடம் இருக்கும்போது தூர விதிகளை குறிப்பிட்டு, சில இடங்களை காலியாக வைத்திருப்பது என்பது, 6 முதல் 16 வயதானவர்களுக்கு இலவச கல்வியை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தின் நோக்கத்திற்கு எதிராக அமைந்துவிடும்” என   என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கட்டாய கல்வி உரிமைச்சட்டம்

மேலும், அந்த பகுதியில் பியூலா மெட்ரிக் பள்ளியை தவிர வேறு பள்ளி ஏதும் இல்லாததால், மனுதாரரின் மகனுக்கு 3 வாரத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென பள்ளி கல்வி துறைக்கு உத்தரவிட்டுள்ளார். எல்.கே.ஜி. மாணவர் சேர்க்கைக்காக வசூலித்த கட்டணத்தை 2 வாரங்களில் மனுதாரரிடம் திருப்பி செலுத்த வேண்டும் என பள்ளி நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.