ஸ்ரீநகர்: காஷ்மீரில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பொதுமக்கள் மூன்று பேரின் மரணம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, அது தொடர்பான நீதிமன்ற விசாரணையை ராணுவ நீதிமன்றம் துவங்கியது.
பொதுமக்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்திய ‘ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் 48’ பிரிவின் பிரிகாடியர் நிலை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். சம்பந்தப்பட்ட மற்ற அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவ தலைமை உறுதியளித்துள்ளது.
‘விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் உயிரிழந்ததற்கு ராணுவ அதிகாரிகளே காரணம். இந்த சம்பவத்தின் போது உடன் இருந்த போலீசார், ராணுவ வீரர்கள், அவர்களின் மேலதிகாரிகள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என இறந்தவர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர்.
ராஜ்நாத் ஆய்வு
27-ம் தேதி சம்பவம் நடந்த பகுதிகளான பூஞ்ச், உள்ளிட்ட
இடங்களில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டு ஆய்வு செய்ய
உள்ளார்.
முன்னதாக ஜம்மு – காஷ்மீரில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே இன்று ஆய்வு மேற்கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement