அருள்மிகு திரிசூலநாத சுவாமி திருக்கோயில், திரிசூலம், காஞ்சிபுரம் மாவட்டம். பிரம்மா தனது படைத்தல் பணி சிறப்பாக நடப்பதற்காக, இலிங்கப் பிரதிஷ்டை செய்து நான்கு வேதங்களையும் சுற்றிலும் வைத்து பூஜை செய்தார். சிவபெருமானும் அவ்வாறே அவருக்கு அருள் செய்தார். இலிங்கத்தைச் சுற்றியிருந்த நான்கு வேதங்களும் மலைகளாக மாறின. மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை, “சுரம்” என்பர். எனவே சிவன், “திருச்சுரமுடைய நாயனார்” என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் “திரிசூலநாதர்” ஆனார். கஜபிருஷ்ட விமானத்துடன் அமைந்த சன்னதிக்குள், சிவன் அருகில் சொர்ணாம்பிகை இருக்கிறாள். முன்பு பிரதான அம்பிகையாக […]