ரஷிய அணுசக்தி கப்பலில் திடீர் தீ விபத்து

மாஸ்கோ:

ரஷியாவின் முர்மான்ஸ்க் பகுதியில் உள்ள துறைமுகத்தில், அணுசக்தி மூலம் இயக்கப்படும் சேவ்மோர்புட் சரக்கு கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த கப்பலில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கப்பலின் கேபின் பகுதியில் தீப்பிடித்தது. இதனால் கப்பலில் இருந்த ஊழியர்கள் பீதி அடைந்தனர்.

இதையடுத்து விரைந்து செயல்பட்ட அதிகாரிகள் உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தினால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. கப்பலின் அணு உலைக்கும் பாதிப்பு இல்லை.

கேபினில் சுமார் 300 சதுர அடி வரை தீ பரவியதாகவும், ஒரு மணி நேரத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டதாகவும் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

260 மீட்டர் நீளம் கொண்ட இந்த சேவ்மோர்புட் கப்பல், ரஷியாவில் பயன்பாட்டில் இருக்கும் ஒரே அணுசக்தி சரக்கு கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.