அஷ்வின் 500 விக்கெட்டுகள்: தென்னாப்பிரிக்க தொடரில் சாதனை சாத்தியமாகுமா?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மிகபெரிய சாதனையை படைக்கும் வாய்ப்பில் இருக்கிறார்  அஸ்வின். அவருக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒன்பதாவது சர்வதேச கிரிக்கெட் வீரர் மற்றும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். 

தற்போது, அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 489 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இன்னும் 500 விக்கெட்டுகள் என்ற மைல் கல்லை எட்டுவதற்கு வெறும் 11 விக்கெட்டுகள் மட்டுமே தேவை. தென்னாப்பிரிக்கவில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக உதவி கிடைப்பதில்லை என்றாலும், அஷ்வினின் பந்துவீச்சு திறமை மற்றும் அனுபவத்தில் அடிப்படையில் அவரை பிளேயிங் லெவனில் இறக்கலாம். அவரால் எந்தவொரு மைதானத்திலும் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை வெற்றி பெற வைக்க முடியும்.

அஸ்வின் பவுலிங் விவரம்

அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 94 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 23.66 சராசரியில் 489 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது பந்துவீச்சு எப்போதும் எதிரணி வீரர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்த தொடரில் அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர் தனது சாதனை நிறைவு செய்யும் வாய்ப்பு உள்ளது. அது நடந்தால், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் மிக முக்கியமான சாதனைகளில் இது ஒன்றாக இருக்கும்.

இதுவரை 500 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இதுவரை 8 வீரர்கள் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கின்றனர். அதில் இந்தியாவின் அனில் கும்ப்ளேவும் இருக்கிறார். அஸ்வின் 500 விக்கெட்டுகள் மைல் கல்லை எட்டிடும் வாய்ப்பு மிக நெருக்கமாகவே இருக்கிறது. 

1. முத்தையா முரளிதரன் – 800 விக்கெட்டுகள்
2. சேன் வார்னே – 708 விக்கெட்டுகள்
3. ஜேம்ஸ் ஆண்டர்சன் – 690 விக்கெட்டுகள்
4. அனில் கும்ப்ளே – 619 விக்கெட்டுகள்
5. ஸ்டூவர் பிராட்- 604 விக்கெட்டுகள்
6. க்ளென் மெக்ராத் – 563 விக்கெட்டுகள்
7. கோர்ட்னி வால்ஷ் – 519 விக்கெட்டுகள்
8. நாதன் லயன் – 501 விக்கெட்டுகள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.