செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிதானமாக விளையாடி வருகிறது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக இரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ‛பாக்சிங் டே’ போட்டியாக இன்று செஞ்சுரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் ‛பீல்டிங்’ செய்ய முடிவு செய்தது.
இதனையடுத்து இந்திய சார்பில் யஷாவி ஜெயிஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால், ரோகித் சர்மா ரபாடா பந்தில் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பிறகு வந்த சுப்மன் கில் 2 ரன்னுக்கும் ஜெயிஸ்வால் 17 ரன்னிலும் பர்கெர் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 24 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி தத்தளித்தது.
பிறகு ஜோடி சேர்ந்த விராட் கோஹ்லி, ஸ்ரேயஸ் ஐயர் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 4 வது விக்கெட்டுக்கு இவர்கள் 71 பந்துகளில் 50 ரன்கள் குவித்தனர்.
இந்திய அணி 26 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கோஹ்லி 33, ஸ்ரேயாஸ் 31 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement