வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பஜ்ரங் புனியாவை தொடர்ந்து மற்றொரு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தனது விருதுகளை திரும்பி அளிக்க முடிவு செய்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக இருந்த பா.ஜ., எம்.பி., பிரிஜ் பூஷன் சிங், பாலியல் புகார் நடவடிக்கை கோரியும், மல்யுத்த கூட்டமைப்புக்கு புதிய தேர்தலை நடத்த கோரியும் மல்யுத்த நட்சத்திரங்கள் வினேஷ் போகத், சாக் ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் தொடர் போராட்டம் நடத்தினர். பின் அரசின் உறுதி மொழிக்கு ஏற்ப டபிள்யு.எப்.ஐ.,க்கு தேர்தல் நடந்தது. முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் ஆதரவாளர் சஞ்சய் சிங் வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 15 பதவிகளில், பிரிஜ் பூஷன் ஆதரவாளர்கள் 13ல் வெற்றி பெற்றனர்.
இந்த தேர்தலில் அதிருப்தி அடைந்த மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக், மல்யுத்த போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, 2019ல் பெற்ற ‘பத்ம ஸ்ரீ’ விருதை திரும்ப அளிக்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக நேற்று பிரதமர் மோடியை சந்திக்க முடிவு செய்தார். ஆனால் எவ்வித முன் அனுமதியும் இல்லை என்பதால், பஜ்ரங் புனியாவை டில்லி போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில் மற்றொரு மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் , பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தனக்கு வழங்கப்பட்ட கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகளை திரும்ப அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement