ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் முதல் ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டு வெளிவரவுள்ள நிலையில், தற்பொழுது வரை கிடைத்துள்ள சில முக்கிய விபரங்களை தொகுத்து அறிந்து கொள்ளலாம்.
ஐசி என்ஜின் ஸ்கூட்டர் பிரிவில் முதன்மையான ஹோண்டா முதற்கட்டமாக இரண்டு பேட்டரி மின்சார ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு வெளியிட உள்ளது. குறிப்பாக ஹீரோ வீடா, ஓலா, டிவிஎஸ் மற்றும் ஏதெர் ஆகியவற்றுடன் பிற மின்சார ஸ்கூட்டர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் வரவுள்ளது.
Honda Activa Electric
இந்திய சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்க பிரத்தியேகமாக ‘‘E’ என பெயரிடப்பட்டு தொழிற்சாலை E, பிளாட்ஃபார்ம் E மற்றும் வொர்க்ஷாப் E என்ற அடிப்படையில் முதற்கட்டமாக பேட்டரி ஸ்வாப் எனப்படுகின்ற இலகுவாக பேட்டரியை நீக்கி மற்றும் மாற்றும் வகையில் ஒரு ஸ்கூட்டரும், அடுத்து நீக்க இயலாத வகையில் நிலையான பேட்டரி பெற்ற ஒரு மாடல் என இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை 2024-2025 ஆம் நிதியாண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
முதலில் வரவுள்ள ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அனேகமாக 2024 ஆம் ஆண்டு பண்டிகை காலத்துக்கு முன்னதாக விற்பனைக்கு வரவுள்ள மாடலின் ரேஞ்ச் அனேகமாக 100-150km/charge ஆக இருக்கலாம். இதில் நீக்க இயலாத வகையிலான பேட்டரி அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆக்டிவா இ-ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட் உட்பட பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்றதாக விளங்கலாம்.
இரண்டாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பேட்டரி ஸ்வாப் நுட்பத்தை பெற்று விளங்கலாம். இந்த மாடலி 60-80 கிமீ ரேஞ்ச் தருவதுடன் விரைவாக பேட்டரியை மாற்ற ஹோண்டா பவர் நிறுவன சேவைகளை நாடு முழுவதும் உள்ள தன்னுடைய டீலர்களில் பேட்டரி ஸ்வாப் செய்யும் முறையை படிப்படியாக விரிவுப்படுத்த உள்ளது.
ஹோண்டா டூ வீலர் தனது EV வாகனங்களுக்கு உள்நாட்டில் இருந்து பெறப்படும் பேட்டரிகள், மோட்டார்கள் மற்றும் PCU களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு பல்வேறு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகள் எதிர்பார்க்கப்படும் நிலையில் ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கின்றது.
ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் விலை ரூ.1.50 லட்சத்துக்குள் துவங்க வாய்ப்புகள் உள்ளது.