பெங்களூரு : மாநில நெடுஞ்சாலை வளர்ச்சி திட்ட வாரிய அலுவலகத்தை புதுப்பிக்க, 8 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது சந்தேகத்துக்கு இடமளிக்கிறது.
பெங்களூரு, கே.ஆர்.சதுக்கத்தின், பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில், கர்நாடக நெடுஞ்சாலை வளர்ச்சி வாரிய அலுவலகம் உள்ளது. 4.27 கோடி ரூபாய் செலவில், அலுவலகத்தை நவீனப்படுத்த தனியார் நிறுவனத்துக்கு, டெண்டர் அளிக்கப்பட்டது. இந்நிறுவனம் 4.85 கோடி ரூபாய்க்கு, ஒப்புதல் பெற்று பணிகளை மேற்கொண்டது.
பணிகள் முடியும் போது, திட்டத்தின் செலவு 8 கோடியே 33 லட்சத்து 39 ஆயிரத்து 839 ரூபாயாக அதிகரித்திருந்தது. டெண்டரில் குறிப்பிட்ட தொகையை விட, 5.66 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
சிவில் மற்றும் மின்சார பணிகளுக்கு, நிர்ணயித்த தொகையை விட 15.79 சதவீதம் அதிகரித்துள்ளது. அலுவலக காரிடாரின் சுவர்களுக்கு, முழுமையான அளவில் அதிநவீன கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. மாநிலம் வறட்சியில் தத்தளிக்கும் நிலையில், இவ்வளவு பணத்தை கொட்டி, அலுவலகத்தை புதுப்பிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர் மரிலிங்கேகவுடா கூறுகையில், வறட்சி காலத்தில், 8 கோடி ரூபாய் செலவிட்டு, அலுவலகத்தை புதுப்பித்ததன் நோக்கம் என்ன. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
”இந்த விஷயத்தை முதல்வர் கவனிக்க வேண்டும். இது மக்களின் வரிப்பணம். யாருடைய அப்பன் வீட்டு பணமும் அல்ல, என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement