டெல்லியில் ஜனாதிபதியுடன் அயோத்தி ராமர் கோவில் கட்டுமானக் குழு தலைவர் சந்திப்பு

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா அடுத்த மாதம் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் கட்டுமானக் குழு தலைவர் நிரிபேந்திர மிஸ்ரா, டெல்லியில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் மற்றும் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் நிரிபேந்திர மிஸ்ரா எடுத்துக்கூறினார்.

முன்னதாக சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை, ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு வருகை தருமாறு நிரிபேந்திர மிஸ்ரா அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும் காங்கிரஸ் கட்சியினர் இந்த விழாவில் பங்கேற்பது குறித்து இன்னும் உறுதிசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.