ஹாசன் : குடும்ப பிரச்னை காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம், தம்பதியின் தற்கொலையில் முடிவடைந்தது.
ஹாசனின், சிக்கட்டே கிராமத்தின், இலாஹி நகரில் வசித்தவர் ரிஜ்வான், 31. இவரது மனைவி சிம்ரன் பானு, 25. குடும்ப பிரச்னை காரணமாக, தம்பதி இடையே அவ்வப்போது சண்டை நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவும், கடுமையான வாக்குவாதம் நடந்தது.
தினமும் சண்டை நடப்பதால், மனம் விரக்தியடைந்த தம்பதி, நேற்று காலை சிக்கட்டேவில் உள்ள ஏரியில் குதித்து, தற்கொலை செய்து கொண்டனர். பென்ஷன் மொஹல்லா போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement