ஹவாய்:அமெரிக்காவில் இன்ஸ்டாகிராம் பிரபலமாக இருந்த மனைவியை குழந்தையின் கண் முன்னே கணவன் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தைச் சேர்ந்தவர் தெரசா கச்சுவாலா, 33. புகைப்படம் மற்றும், ‘வீடியோ’க்கள் பகிரும், ‘இன்ஸ்டாகிராம்’ சமூக ஊடகத்தில் பிரபலமான இவர், அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.
கணவர் ஜேசன் கச்சுவாலாவுடன் ஏற்பட்ட தகராறால், அவரை பிரிந்து, தன் மூன்று குழந்தைகளுடன் தனியே வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் தெரசா வீட்டிற்கு வந்த அவரது கணவர், தெரசாவை அவரது எட்டு வயது மகள் கண் முன்னேயே துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காரில் தப்பி ஓடினார். போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், அவரும் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement