சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி ‘காவேரி’ இயந்திரம் மூலம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. துர்காபாய் தேஷ்முக் சாலையில் க்ரீன்வேஸ் சாலை சந்திப்பு முதல் அடையாறு சந்திப்பு வரை திரு.வி.க. பாலம் வழியாக சுமார் 1.226 கி.மீ. நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணியில் காவேரி மற்றும் அடையார் என்ற இரண்டு சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. இதில் க்ரீன்வேஸ் சாலை சந்திப்பு முதல் திரு.வி.க. பாலம் வரை […]